குற்றவாளிகளுக்குக் கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும்...சிபிசிஐடி!!

குற்றவாளிகளுக்குக் கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும்...சிபிசிஐடி!!

நெல்லையில் பல்வீர் சிங் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டப்பகுதியில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் தாக்கியதில் பற்கள் உடைந்து காயமடைந்தனர். சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் இதுபோல் காயமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்ததையடுத்து காவல் உதவி ஆய்வாளர் பல்வீர்சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் சில காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. அவர் பரிந்துரைத்ததையடுத்து வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.  சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சிபிசிஐடி அலுவலகத்திற்குச் சென்று சாட்சியளிக்க பயந்ததையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட சிவந்திபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து செல்லப்பா மாரியப்பன் மற்றும் வேத நாராயணனிடமும் சிபிசிஐடி போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணை சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது. விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளதால் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்து சாட்சியளிக்கவில்லையென்றும், சிபிசிஐடி விசாரணையில் முழு நம்பிக்கை இருப்பதாகவும், குற்றவாளிகளுக்குக் கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:   முட்டைகளால் நிரம்பிய நாகர்கோவில் சாலை....!!