கடலூர் : தனியார் நிறுனத்தில் வருமான வரித் துறை சோதனை..!

கடலூர் : தனியார் நிறுனத்தில் வருமான வரித் துறை சோதனை..!

பண்ருட்டியில் தனியார் ஸ்டீல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான ஹலிமா ஸ்டீல் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அலிமா ஸ்டீல் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான 4 இடங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : போதை பொருட்கள் விற்பனை செய்த இளைஞர்..! கைது செய்த அதிகாரிகள்...!