ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம்...

இலவச மனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம்...

கடலூர் | விருதாச்சலம் அடுத்த பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராமல் தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் இலவச குடியிருப்பு வீட்டுமனை வழங்க கோரி‌ பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத்தால் இன்று பரவலூர் கிராம மக்கள் 100 க்கு மேற்பபட்டோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகை தந்து நுழைவு வாயிலில் பட்டா வழங்க கோரி முழக்கமிட்டனர்.

மேலும் படிக்க | அரை மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்தில் பொதுமக்கள் போராட்டம்...

பின்னர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதே போல் கடலூர் அடுத்த செம்மங்குப்பம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு 40 ஆண்டுகாலம் வசித்தும் வரும் மக்களுக்கு இலவசம் மனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர், ஆட்சியர் என பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பவர் இன்று செம்மங்குப்பம் கிராம மக்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

செம்மங்குப்பம், பரவலூர் ஆகிய 2 கிராம மக்களுக்கும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு அளித்து போராட்டத்தில் ஈடுப்பட்டடாதல் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | மழைநீர் வடிகால் குழியை மூட அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதம்