காவலர்கள் துப்பாக்கி சுடும் போட்டியை ஆய்வு செய்த டிஜிபி...

அகில இந்திய காவல்துறையின் துப்பாக்கி சுடும் போட்டியை, டிஜிபி சைலேந்திரபாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காவலர்கள் துப்பாக்கி சுடும் போட்டியை ஆய்வு செய்த டிஜிபி...

செங்கல்பட்டு | ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிதீவிரப்படை  துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில், 23வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியை தமிழ்நாடு காவல்துறை நடத்துகிறது. இந்த போட்டிகள் நேற்று துவங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் துவக்கவிழா நேற்று ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியக கவாத்து மைதானத்தில் துவங்கியது.  இப்போட்டிகளில் இந்தியாவின் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என சுமார் 700 துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பிஸ்டல், 100-மீட்டர், 200-மீட்டர், 300-மீட்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இரண்டாம் நாளான இன்று 200 மீட்டர் தூரத்திற்கான துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வருகை தந்து பார்வையிட்டார். முன்னதாக அதிதீவிர படை பயிற்சி மையத்திற்கு புதியதாக அமைக்கப்பட்ட வளைவை (ARCH) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பயிற்சி மைய வளாகத்திற்குள் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும் படிக்க | பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்!