பட்டாபிஷேக ஊர்வலம், உறியடி நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்பு!!!

கார்த்திகை , மார்கழி மாத பஜனை, ஊர்வலம் மற்றும் உறியடி போன்ற திக்குறிச்சி மஹா தேவர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஏறாளமானோர் பங்கேற்றனர்.

பட்டாபிஷேக ஊர்வலம், உறியடி நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்பு!!!

குமரி | கார்திகை, மார்கழி மாதங்களில் பக்தர்கள் குழுக்களாக  வீடு வீடாக சென்று பக்தி பஜனை பாடல்களை பாடி வந்தனர் திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்தர்கள் சார்பாகவும் வீடு வீடாக சென்று பஜனை பாடல்களை பாடி வருவது வழக்கம். இந்நிலையில் இன்று பஜனை பட்டாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கண்ணபகவானை வீடு வீடாக கொண்டு சென்று பஜனை பாடல்களை பாடினர் பக்தர்களும் தீபாரதனை கொடுத்து வரவேற்பளித்தனர் தொடர்ந்து உறியடி என்று அழைக்கபடும் கண்ணன் விளையாட்டு ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கண்ணன் வேடமணிந்த சிறுவர்கள், இளைஞர்கள் கண்ணன் சிறு வயதில் விளையாட்டு, குறும்புகள், ஆயகலைகளை நடித்து காட்டினர் தொடர்ந்து அந்தரத்தில் தொங்கிய உறியிலிருந்த வெண்ணையை பிடித்த கண்ணன் வேடமணிந்தவர்கள் கண்ணபிரான் படத்திற்கு  அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது இந்த நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | மார்கழி மாதம் - அமாவாசை ஊஞ்சல் உற்சவம்..!