குழந்தை திருமணம் வேண்டாம்... படிக்க வையுங்கள்... - மாவட்ட ஆட்சியர்!

மலைவாழ் மக்களுக்கு வீடு வழங்கும் விழாவில், வீடுகளை அப்பகுதி குழந்தைகளை திறக்க வைத்து அழகு பார்த்தார் மாவட்ட ஆட்சியர்.

குழந்தை திருமணம் வேண்டாம்... படிக்க வையுங்கள்... - மாவட்ட ஆட்சியர்!

விருதுநகர் | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்தி கோயில் பகுதியில் சுமார் 30ற்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புதிதாக தமிழக அரசு மற்றும் ராம்கோ  நிறுவனம் சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பீட்டில் 12 பசுமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த வீடுகளை மலைவாழ் மக்களுக்கு வழங்குவதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த வீடுகளை திறந்து வைக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வருகை தந்த நிலையில் மலைவாழ் மக்களின் குழந்தைகளை அழைத்து புதிய வீடுகளை திறக்க வைத்து மாவட்ட ஆட்சியர் அழகு பார்த்தார்.

இந்த சம்பவம் பொதுமக்களுக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு எதிராக விவசாயி நீதிமன்றத்தில் வழக்கு..!

பின்னர் மலைவாழ் மக்களிடம் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர், 16, 17 வயதில் தங்களது குழந்தைகளை திருமணம் செய்து வைக்க வேண்டாம் எனவும் நன்றாக அவர்களை கல்வி கற்க  வைத்து உயர்ந்த பதவிக்கு செல்வதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் தனக்கு 27 வயதில் தான் திருமணம் நடந்ததாகவும், 17 வயதில் தனக்கு திருமணம் நடந்ததால் இது போன்று மாவட்ட ஆட்சியராக ஆயிருக்க முடியாது எனவும் தெரிவித்தார். தங்களது குழந்தைகளை  கல்வி மட்டுமே கற்க வைக்க வேண்டும் எனவும் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தங்களை தேடி வரும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | தடுப்பூசி செலுத்த வந்த நாய்க்கு வெறிபிடித்த சம்பவம்...! அச்சத்தில் அரறியடித்த மக்கள்...!