பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

சூழியல் பூங்கா தகவல் மையத்தின் வரவேற்பு மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பெண்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்ளை வழங்கினார்.

பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் அடுத்த படூர் ஊராட்சியில் முன்னாள் மத்திய அரசு செயலரும், முன்னாள் தமிழ்நாடு திட்டக்குழு துணைத்தலைவருமான ஐ.ஏ.எஸ் சாந்தா ஷீலாவுக்கு சொந்தமாக 30 சென்ட் இடம் உள்ளது.

அதில் மாதிரி பண்ணையாக சூழியல் பூங்கா மற்றும் தகவல் மையம் அமைத்துள்ளார். இதில் இயற்கை முறை சார்ந்த பல வகை செடிகளை உடைய மூலிகை தோட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | ' பிளவுபடட்டும் இந்த பூமியும் ஆகாயமும் ' வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர்...!

பலநூறு படுக்கைகள் உடைய காளான் வளர்ப்பு குடில், கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் அசோலா சாகுபடி, தேனீக்கள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண் புழு உரம் தயாரித்தல், சுகாதார கழிப்பறை உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி அளிக்கும் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பண்ணை வாயிலாக, இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் சுயதொழில் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த சூழியல் பூங்கா மற்றும் தகவல் மையத்தின் வரவேற்பு மையம் மற்றும் பெண்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

மேலும் படிக்க | புதுச்சேரியிலிருந்து பெட்டி பெட்டியாக கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள்...! போலீசாரிடம் சிக்கிய சம்பவம்..!

படூர் ஊராட்சி மன்ற பெண் தலைவர் தாராசுதாகர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மீன்வளத்துறை ஆணையர் பழனிச்சாமி, மகளிர் மேம்பாட்டு மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள, இயற்கை முறை விவசாய சாகுபடியை பார்வையிட்டுதல், பயிற்சி கூடத்தில் உரையாடல், ஏரியில் வளர்ப்பு மீன்குஞ்சு விடுதல், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இயற்கை உணவு சார்ந்த பல்வேறு கண்காட்சிகளை காட்சிபடுத்தினர். இதில் 80 மகளிருக்கு மாடித்தோட்ட  மூலிகை வளர்ப்பு பயிற்சி நிறைவு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வழங்கினார். 

மேலும் படிக்க | சிசிடிவி இல்லாததால் தொடர் வாகன திருட்டு!