காதில் பூ வைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்...! காரணம் என்ன...?

காதில் பூ வைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்...! காரணம் என்ன...?

வந்தவாசி அருகே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் பல மாதங்களாக விவசாயிகள் கடன் கேட்டு கொடுக்காததால் காதில் பூவை வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மோசவாடி கிராமத்தில்  உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் பல மாதங்களாக பயிர் கடன் வழங்காததால் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் காதில் பூ வைத்துக் கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி அடுத்த மோசவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் கடனை வாங்கி முறையாக கடனை செலுத்தி வந்துள்ளனர். 

விவசாயிகள் கடனை வட்டியுடன் செலுத்திய நிலையில் மீண்டும் பயிர் கடன் கேட்டு மூன்று மாதங்களுக்கு மேலாக  விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தின் அலுவலர்கள் அலைக்கழித்து வருவதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் ஆத்திரமடைந்த விவசாயிகள் மோசவாடி கூட்டுறவு கடன் சங்கங்கத்தின் முன்பாக  தினமும் கரணங்கள் சொல்லி தங்களை அலைக்கழிக்கும் அலுவலர்களை விமர்சிக்கும் விதமாக காதில் பூ வைத்துக் கொண்டு விவசாயிகளுக்கான பயிர் கடனை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் கடன் வழங்க வேண்டும் என்று முழக்கங்களை  எழுப்பினர். மேலும் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள்  கூட்டுறவு கடன் சங்கத்தின்  மூலம் தங்களுக்கு உரிய பயிர்க் கடனை வழங்க அரசு ஆவன செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது.