நெற்களம் இன்றி தவிக்கும் விவசாயிகள்.. கவனிக்குமா அரசாங்கம்?

தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியில் நெற்களம் இல்லாமல் விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருக்கின்றனர். அறுவடை செய்த நெற்கதிர்கள் வீணாவதால் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெற்களம் இன்றி தவிக்கும் விவசாயிகள்..  கவனிக்குமா அரசாங்கம்?

தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியில் சுமார் 650 ஏக்கர் நிலப்பரப்புக்கு விவசாய நிலம் உள்ளது. ஆனை கட்டி போர் அடித்ததாக கூறப்படும் இந்த நிலப்பரப்பில் முன்பு தனியார் மற்றும் அரசு நிலங்களில் என சேர்த்து மொத்தம் ஐந்து நெற்களங்கள் இருந்துள்ளது.

விவசாய நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை களங்களுக்கு கொண்டு வந்து போர் அடித்து நெற்களை பிரிப்பதே விவசாயத் தொழிலாளர்களின் பிரதான வேலையாக இருந்தது.

மேலும் படிக்க | யானை தந்தம் பதுக்கிய இருவர் கைது...

ஆனால் இந்த ஐந்து நெற்களங்களிலும், வணிகவளாகம் மற்றும் நலத்திட்ட வளாகங்கள் அமைக்கும் அரசு கட்டிடமாகவும் மாறி விட்டபடியால் நெற்களமின்றி தவித்துப் போய் நிற்கின்றனர் விவசாயிகள். தற்போது குச்சனூரில் இருந்து மார்க்கையன் கோட்டை செல்லும் பிரதான சாலையையே நெற்களமாக பயன்படுத்தியும் வருகின்றனர்.

இதன் காரணமாக மார்க்கையன் கோட்டை பிரதான சாலையில் அவ்வப்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதும், சாலையில் வைத்தே போர் அடிப்பதால் நெல்மணிகள் பெருமளவு வீணாகி வருவதும் வாடிக்கையாகி வருகிறது. 

மேலும் படிக்க | 31 வது நாள் யாத்திரை...குறைகளை கேட்டறியும் ராகுல்...!

இதுதவிர, சாலையில் வைத்து நெற்கதிர்களை எடுப்பதை அறிந்து கொண்ட தனியார் நெல் கொள்முதல் நிறுவனங்கள் விவசாயிகள் கொண்டு வரும் நெற்களை அடிமட்ட விலைக்கும் கேட்டு வருகின்றனர். இதுவே தங்களுக்கு தனியாக நெற்களங்கள் இருந்தால், தாங்கள் வைத்த விலையிலேயே விற்பனை செய்யலாம்.

விவசாயிகள் லாபம் பார்க்கலாம் என்பது விவசாயிகளின் கனவாகவே உள்ளது. நெல் விவசாயம் இந்த பகுதியின் அருகே அரசு நிலத்தில் புதிதாக நெற்களம் அமைத்து தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். 

மேலும் படிக்க | விவசாய நிலத்தில் அட்டகாசம் செய்யம் காட்டுப்பன்றிகள்...! வனத்துறையினருக்கு கோரிக்கை...!

பல மாதங்கள் காத்திருந்து அறுவடை செய்யப்பட்ட இந்த நெற்கதிர்கள் சாலையில் சிதறி வீணாவதையும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா? விவசாயிகள் வாழ்க்கை மலர்ச்சி  பெறுமா? 

மேலும் படிக்க | நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை உயர்த்தி வழங்க கோரிக்கை...! போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்...!