ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!!

ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!!

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில்   ஆர்வத்துடன் மக்கள் பங்கேற்று மீன்பிடித்துச் சென்றனர்.  விவசாயம் செழிக்கவும் நல்லமழை பெய்யவும் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெறுவது  தமிழகத்தில் வழக்கமாக உள்ளது

இதன் ஒரு பகுதியாக ஆண்டிபட்டி  அருகே கண்டமனூரில் உள்ள பரமசிவன் கோவில் கண்மாயில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா இன்று நடைபெற்றது.  இந்த மீன்பிடி திருவிழாவில் ஜிலேபி கெண்டை கட்லா, ரோகு, மிருகால், வாளை உள்ளிட்ட பெரிய வகை மீன்களும்  சிறியவகை மீன்களும் ஏராளமாக கிடைத்தன

இம்மீன்களை கிராமத்தினால் ஆர்வத்துடன் கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு வலைகளை வீசி பிடித்து சென்றனர்.  இக்கிராம கண்மாயில் முதன்முறையாக மீன்பிடித் திருவிழா நடைபெறுகிறது 

இவ்விழாவிற்காக கடந்த ஓராண்டு காலமாக மீன்குஞ்சுகள் கிராமத்தினரால்  விடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.  மேலும் தனியார்களுக்கு மீன்பிடி ஏலம் விடாமலும் ஒரு ஆண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த மீன்கள் கிராமத்தினருக்கு பயன்படும் வகையில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   மாட்டு கொட்டகையை துவம்சம் செய்த காட்டு யானை....!!