செஞ்சி: 9 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகள்...!நேரில் ஆய்வு செய்யும் அதிகாரிகள்!!

செஞ்சி: 9 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகள்...!நேரில் ஆய்வு செய்யும் அதிகாரிகள்!!

செஞ்சி பேரூராட்சியில் 9 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மை செயலாளர் ஹர்சகாய் மீனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைத்தல், பேருந்து நிலையம் மேம்பாட்டு பணி மற்றும் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள ஏரியில் பூங்கா அமைத்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மை செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்க: ஆ.ராசா வழக்கு: ஏழு வருடத்திற்கு பிறகு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை...!

அப்போது, செஞ்சி பகுதியில் போடப்படும் 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியையும், 6 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியையும், 1 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் செஞ்சி ஏரியில் பூங்கா அமைத்தல் மற்றும் புனரிமைக்கும் பணியையும் ஆய்வு செய்தனர். 

ஆய்வின் போது பணிகளை தரமாகும் விரைவாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடித்திட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், ஆய்வின்போது செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் உள்ளிட்டோர் உடனிருந்தது குற்ப்பிடத்தக்கது.