தொடர் மழையால் பானை உற்பத்தி பாதிப்பு...

தொடர் மழையால் பானை உற்பத்தி பாதிப்பு...

கிருஷ்ணகிரி | போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ளமங்லபட்டி, சென்ராயம்பட்டி, அகரம், உள்ளிட்ட பல பகுதிகளில் பொங்கல் பண்டிகையை யொட்டி ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே பானைகள் உற்பத்தியில் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தொடர் மழை காரணமாக பொங்கல் பானை உற்பத்தி கடுமை யாக பாதிப்பு அடைந் துள்ளது. இது குறித்து, போச்சம்பள்ளி வட்டம், மங்கலப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகர் கூறுகையில்:

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. புது பானைகளை ஒரு மாதத்திற்கு முன்பே தயாரிப்போம். ஆனால் தொடர் மழையின் காரணமாக பானை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். ஏரிகளில் தண்ணீர் நிரம்பியதால்மண் எடுக்கவும் முடியவில்லை.

என்று கூறினார். மேலும், இருப்பில் உள்ள களி மண்ணை வைத்து புது பானை தயாரிக்க முடிவு செய்த நிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக வெயில் இல்லாமல் உள்ளதால் மேலும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், இதனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஒவ்வொரு பானையும் கூடுதல் 50 முதல் 100 ரூபாய் விலை உயர வாய்ப்பு என்றார்.

மேலும் படிக்க | பால் கொள்முதல் விலை..! கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!