1,57,000 புதிய ரூபாய் நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம்!

செவிலிமேடு நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் 1 லட்சத்து 57ஆயிரம் புதிய ரூபாய் நோட்டக்களினால் மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டதை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திர்ந்து தரிசனம் செய்தனர்.

1,57,000 புதிய ரூபாய் நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம்!

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நவராத்திரி ஒட்டி பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வித விதமான அலங்காரங்கள் சேதிக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள நாக துர்க்கை அம்மன் அருள் பீடத்தில் நவராத்திரி விழாவானது ஆண்டு வரும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

மேலும் படிக்க | அம்மன் தலையில் சுற்றிய பாம்பு...! ஆச்சர்யத்துடன் வழிபட்ட மக்கள்...!

இவ்வாண்டிற்கான நவராத்திரி விழாவானது கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கி வரும் 5-ஆம் தேதி விஷ்வரூப தரிசனமும் சர்வ அலங்காரத்துடன் சூரசம்ஹாரம் விழாவுடன் இவ்விழா நிறைவு பெறுகிறது. இந்த நவத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் நாக துர்கை அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

மேலும் படிக்க | களைகட்டும் மைசூரு தசரா விழா..!

அந்த வகையில் அவ்விழாவின் ஏழாம் நாளான இன்று நாக துர்க்கையம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாலட்சுமிக்கு அலங்காரமனாது சேவிக்கப்பட்டு 10, 20, 50, 100, 200, 500. புதிய ரூபாய் நோட்டுக்களினால் 1 லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரம் (1,57,000) ரூபாயினால் அலங்காரமானது சேவிக்கப்பட்டு நகை ஆபரணங்கள் அளிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் படிக்க | கோவிலை இடிக்காதீர்கள்! கோவில் சுற்றி அமர்ந்து போராட்டம்!

இந்த 1 இலட்சத்து ஐம்பத்தி ஏழாயிரம் (1,57,000) ரூபாய் நோட்டுக்களினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்த நவராத்திரி விழாவையொட்டி சாமி தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்களுக்கும் அன்ன பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | சிசிடிவி கேமராவையே திருடிச் சென்ற மர்ம நபர்கள்..! கோவில்களில் கைவரிசை..!