கீழ்பென்னாத்தூர் அம்மன் 70- ஆம் ஆண்டு தேர் திருவிழா...!

கீழ்பென்னாத்தூர் அம்மன் 70- ஆம் ஆண்டு தேர் திருவிழா...!

கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் 70- ஆம் ஆண்டு தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கிராமத்தில்  அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.   இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் நிகழ்ச்சிக்கு முன்பாக அம்மன் அலங்காரத்துடன் வீதி உலா வருதல்,  அம்மன் வேடமணிந்து மயான கொள்ளை, வள்ளான கண்டி சம்ஹாரம் அம்மன் அலங்காரத்துடன் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  

அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்பு பொதுமக்கள் வேண்டுதல் வைத்து பொங்கல் வைத்தல் மாலை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் முக்கிய மாடவீதிகளில் தேர் ரத உற்சவம் நடைபெற்றது.   இதில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குடும்ப பிரச்சினை குறித்து, தொழில் முன்னேற்றம் போன்றவை தொடர்பாக வேண்டுதல் வைத்து வடம் பிடித்து தேர் இழுத்தால் நினைத்தது  நிறைவேறும் என்பதால் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிக்க:  போலி சான்றிதழ் இன்ஜினியர்கள்.... அரசு பேருந்தில் கவிழ்ந்த கிரேன்...