கொடைக்கானல் டூ பழனி ரோப்கார் சேவை..! 2- ஆவது நாளாக ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்...!

கொடைக்கானல் டூ பழனி ரோப்கார் சேவை..! 2- ஆவது நாளாக ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்...!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதி முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். மேலும் கொடைக்கானல் மற்றும் பழனி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ரோப் கார் சேவை திட்டம் இருந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது . இந்த நிலையில் கொடைக்கானல் - பழனி மலை பகுதியில் ரோப் கார் திட்டம் அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சோதனை நடத்தினர். 

அதன் படி, இன்று கொடைக்கானல் வில்பட்டி, கோவில்பட்டி, புலியூர், குறிஞ்சி ஆண்டவர் கோவில் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் குறித்து பேசிய அதிகாரிகள், இது அமைய சுமார் 24 மாதங்கள் ஆகும் எனவும், சுமார் 450 கோடி ரூபாய் செலவில் அமைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் முடிந்த பின்னர், கொடைக்கானலில் சுற்றுலாப் பணிகளின் வருகை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.