வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்...! அவதிக்குள்ளான கிராம மக்கள்...!

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்...! அவதிக்குள்ளான கிராம மக்கள்...!

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு,  ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில்  ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளம் சூழ்ந்ததால் ரெட்டிபாளையத்திலிருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு வரும் பள்ளி கல்லூரி மாணவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிப்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழையின்போதும் இந்த சாலை மழைநீரால் துண்டிக்கப்படுகிறது. தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதைத் தாண்டி மழைநீர் செல்கிறது. தற்போது தரைப்பாலத்தில் வெள்ளம் செல்வதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் 5 முதல் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைத்துதர வேண்டுமென அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க : இனி ஹன்சிகாவும் மிங்கிளா? சிங்கிள்சுக்கு வந்த சோதனை...