கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் மணல் கொள்ளை ; மக்கள் முற்றுகை போராட்டம்...!

கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் மணல் கொள்ளை ; மக்கள் முற்றுகை போராட்டம்...!

திருச்சி மாவட்டம் தாளக்குடியில்  செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அதிகளவில் மணல் அள்ளுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சியில் மணல் மாட்டு வண்டி குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் தினமும் மணல் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் என 800க்கும் மேற்பட்ட வண்டிகளில்  மணல் அள்ளி செல்லுகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு நீரேற்று குழாய் அந்த பகுதியில் உள்ளது, அதன் அருகிலேயே குவாரி செயல்பட்டு வருவதாகவும், மேலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலம் அருகே நூற்றுக்கணக்கான லாரிகள் மணல் அள்ளுவதாலும், குறிப்பாக குறிப்பிட்ட நேரம் வரை தான் மணல் அல்ல வேண்டும் என விதி உள்ளபோதிலும் 24 மணி நேரமும் அங்கு மணல் அள்ளப்படுகிறது .  

 உரிய அனுமதி பெற்று மணல் அள்ளுபவர்கள் கூட எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. அனுமதி பெறாமலும் ஏராளமானோர் மணல் குவாரிகளில் தினம்தோறும் மணல் அள்ளி செல்கின்றனர். அதை அதிகாரிகள் தெரிந்தும் தெரியாதது போல் கையூட்டு பெற்று விட்டு விடுகின்றனர். ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு லாரியில் செல்வதற்காக 15 அடிக்கு மேலாக ஆற்று மணலை கொண்டு சாலை அமைக்கப்பட்டும் உள்ளது. அதிகப்படியான மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு வெள்ளம்  சென்ற போது கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த நூறாண்டுகள் பழமையான  இரும்பு பாலம் உடைந்து விழுந்தது. இதுவே மணல் குவாரிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு அதிக அளவு மணல் அள்ளியதற்கு உதாரணமாக உள்ளது.  

இந்த மணல் குவாரிகளில் காவல்துறையினரும், தாளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டு கொள்ளாமல் வாகனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு டோக்கன் ஆன்லைனில் பெறாமலே மணல் அள்ளி செல்கின்றனர். 

எனவே அரசு இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி மணல் குவாரிகளை சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டே அமைக்க வேண்டும் அவை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கால குட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க   | ”ஆளுநர் கிண்டியிலிருந்து கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டி வரும்” எச்சரித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!