பரவும் காட்டுத்தீயால் புகை மண்டலத்தில் சூழ்ந்துள்ள மலைப் பகுதிகள்...

பரவும் காட்டுத்தீயால் புகை மண்டலத்தில் சூழ்ந்துள்ள மலைப் பகுதிகள்...

திண்டுக்கல் |  கொடைக்கானலில் மலைப்பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக வனப்பகுதி மட்டுமன்றி பல்வேறு பட்டா நிலங்களும் தொடர்ந்து காய்ந்த நிலையில் இருந்து வந்தது.

தொடர்ந்து மலைப்பகுதியில் சில இடங்களில் வனப்பகுதி மட்டுமின்றி பல்வேறு இடங்களில் தீயானது ஏற்பட்டு வந்தது . தொடர்ந்து கொடைக்கானல் செண்பகனூர் சிட்டி வியூ பகுதியில் நேற்று இரவு முதல் தற்போது வரை வனப்பகுதியில் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவில் காட்டுதியானது எரிந்து வந்தது.

மேலும் படிக்க | திடீரென பரவிய காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள் எரிந்து சேதம்...

இதனால் அரிய வகை மூலிகை செடிகள் மரங்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகியது . தொடர்ந்து காட்டு தீ எரிந்து வருவதால் வனப்பகுதியில் உள்ள மான் காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சூழல் இருந்து வந்தது.  இதனை தொடர்ந்து தீயை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

மேலும் மேலும் மலைப்பகுதி முழுவதிலும் கடும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது .இதனால் பொது மக்கள் மூச்சு திணறும் நிலை ஏற்பட்டு வருகிறது.எனவே காட்டு தீ தடுக்க வனத்துறையினர் நவீன முறை இயந்திரங்கள் பயன்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது .

மேலும் படிக்க | திடீரென பரவிய காட்டுத் தீயால் கருகிய மரங்கள்...