உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்...! தொடர் குற்றசாட்டுகளால் நடவடிக்கை...!

உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்...! தொடர் குற்றசாட்டுகளால் நடவடிக்கை...!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அசைவ, சைவ உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து பரிமாறப்படுவதாகவும், புகார் தெரிவித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு வாட்ஸ்அப் மூலம் கடந்த சில தினங்களாக புகார்கள் வந்துள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களிலும் கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பேருந்து நிலையம் பகுதியில் செயல்படும் 3 அசைவ உணவகங்கள், 6 இனிப்பு கடைகளில் வணிக உரிம சான்றிதழ் புதுப்பிக்கப்படாமலும், சமையல் கூடங்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாலும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு உணவுகள் தயாரிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி உத்தரவிட்டும், அதே பகுதியில் செயல்படும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதை கண்டறிந்தும் 7 கடைகளுக்கு மாவட்ட உணவுபாதுகாப்பு அலுவலர் உத்தரவின் பேரில் தலா 2000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர் ஆய்வு!