மூடு பனியால் அழகாக காட்சியளிக்கும் பாபநாசம்...

சாலைகள் தெரியாத அளவிற்கு பனி போர்வை போர்த்தியது போன்று நிலவிய மூடு பனியால் மலை பிரதேசம் போல் ரம்மியமாக காட்சி அளித்தது.

மூடு பனியால் அழகாக காட்சியளிக்கும் பாபநாசம்...

தஞ்சை | சூரியன் உதயமாகியும் 8 மணி வரை கடும் மூடு பனி நிலவியது. அதிலும், பொதுவாக தை மாசி மாதங்களில் பனி மூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகமாகவே இருக்கிறது.

செல்போன் கோபுரங்கள், சாலையின் மறுபுறம், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிபடர்ந்து பனிப்போர்வை போர்த்தியது போன்று மூடுபனி யாக இருந்தது.

சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகள் எரிய விட்டவாறு சென்றன. மூடுப்பனியால் தஞ்சை நகரம் மலை பிரதேசம் போல் ரம்மியமாக காட்சி அளித்தது.

மேலும் படிக்க | 13வது சட்டதிருத்தத்துக்கும் தமிழுக்கும் தொடர்பு என்ன.... மக்கள் எதிர்ப்பது ஏன்?!!