பாமக தலைவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி மனு!

பாமக தலைவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி மனு!

தீண்டாமையை வலியுறுத்தும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் கட்சியின் நிர்வாகி பாலு ஆகியோர் செயல்படுவதாகவும் அவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் " விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் நீண்ட காலமாக கடைபிடிக்கும் மரபான தீண்டாமையை தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பாலு பேசி வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் இது போன்று பேசி வரும் வழக்கறிஞர் பாலுவையும் அதற்கு காரணமாக செயல்பட்டு வரும் கட்சி நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:"திமுகவினரை சீண்டிப்பார்த்தால் தாங்க மாட்டீர்கள்" மு.க.ஸ்டாலின் விளாசல்!