போலீஸ் : எதுக்குடா செயினை ஆட்டையப்போட்ட...? திருடன்: படம் எடுக்கபோறேன் சார்...!

போலீஸ் :  எதுக்குடா செயினை ஆட்டையப்போட்ட...?  திருடன்:  படம் எடுக்கபோறேன் சார்...!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் இரு வெவ்வேறு இடங்களில் இரண்டு பெண்களிடம் 18 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற தம்பதியர்கள் மற்று மகன் ஆகிய 3 பேரையும்  போலீஸார்  கைது செய்தனர். காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர். 

கோவில்பட்டி பங்களாத் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி பூமாரி(எ) முத்துமாரி (57 வயது ). இவர், கடந்த மாதம் 15 -ஆம் தேதி மாலை தனது வீட்டின் முன்பு நாற்காலியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது ஒரு பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் பூமாரி(எ) முத்துமாரி  கழுத்தில் அணிந்திருந்த பன்னிரெண்டேகால் பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர்.

இதே போன்று, கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையைச் சேர்ந்த கோபால்சாமி மனைவி வெள்ளத்தாய்(44) ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் ஜவுளிக்கடை அருகே உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் வெள்ளத்தாய் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு சென்றுள்ளனர். இதே போன்று கோவில்பட்டியில் பல்வேறு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு போன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பொருட்களை பறிகொடுத்தவர்கள் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்,  இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பச்சயங்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த பீரூஷா என்பவரின்  மகன் சனாபுல்லா(42), அவரது மனைவி ரசியா(38) மற்றும் அவர்களது  மகன் ஜாபர் (19) ஆகிய 3 பேரையும்  கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து விசாரணை செய்ததில் சனாபுல்லா விற்கு சினிமா மீது இருந்த மோகத்தால் இது போன்ற செயின் பறிப்பில் தந்தையும் மகனும் ஈடுபட்டதாகவும் பறித்து வரும் தங்க நகைகளை மனைவி ரசியா விற்று பணமாக்கி அதன் மூலம் தமிழில் "நான் அவன் தான் " என்ற திரைப்படத்தினை இயக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், விரைவில் அந்தப் படம் திரைக்குவர தயாராகி வருவதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்து திகைப்பையூட்டினார். மேலும் கொசுறு தகவலாக அந்தப் படத்தில் சனாபுல்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு முன்னரே தமிழில்  ' நான் அவன் இல்லை ' என்ற பெயரில்  திரைப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க    | திரைக்கு வந்து இரண்டு நாட்களே ஆன, ஆதிபுருஷ்-க்கு பொதுநல வழக்கு!