ஆற்றில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை...

மாயனூா் காவிாி ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரிய பள்ளங்களை மூட பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

ஆற்றில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை...

கரூா் | ஆற்றில் குளிக்க சென்ற 4 பள்ளி மாணவிகள் தண்ணீா் மூழ்கி உயிாிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆற்றுப்பகுதியில் மணல் பரப்பில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை அதிகாாிகள் சீரமைக்காமல் அலட்சியம் காட்டியதாலே இந்த சம்பவம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் அதனை உடனே சீரமைக்க வேண்டும் எனவும் கோாிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் படிக்க | ஆக்கிரமிப்பு என்றால் திமுக அரசு கோயில்களைதான் இடிக்கிறார்கள்!!! மன்றங்களை இடிப்பது அல்ல கோபத்தில் பேசிய பாஜக அமைச்சர்

விழா காலங்களிலும் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் மற்றும் இறுதி நிகழ்ச்சிகளுக்கு காவிரி ஆற்றிற்கு நீராட வருவதால் அப்பகுதிகளில் நீரின் ஆழம் மற்றும் புதைமணல் உள்ள பகுதிகளில் அதிகாரிகள் எச்சரிக்கை பலகை வைப்பர்.

அதோடு தங்களது கடமை முடிந்து விட்டது என்று எண்ணாமல் மக்கள் அதிகமாக கூடும் காலங்களில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எச்சரிக்கை விடுக்கும் வகையிலும்  ஆட்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | ஒப்பந்த பணியாளர்களாக 25 ஆண்டுகள்...பணி நிரந்தரம் கோரி சாலை மறியல்!

மேலும், மணல் குவாரிகள் வருவதற்கு முன்னால் ஆற்றின் இருபுற கரைகளிலும் ஓடிய தண்ணீர் தற்போது அதிக அளவு மணல் அள்ளப்பட்ட காரணத்தினால் ஆற்றின் நடுப்பகுதியில் மட்டும் தண்ணீர் செல்கிறது. இதனால் ஆழம் தெரியாமல் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

எனவே, கரையோரம் தண்ணீர் வருமாறு வசதி ஏற்படுத்தி திருச்சி அம்மா மண்டபம் மற்றும் பவானி கூடுதுறை கொடுமுடி பகுதிகளில் உள்ளவாறு தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று நடந்த துயர சம்பவம் இனி நடந்திராத வகையில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளன.

மேலும் படிக்க | இரவு முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை...