குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து...! வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்...!

குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து...! வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்...!

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கீழவீதி தெருவில் ராஜூ முதலியார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தினகரன் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மேற்கூரை பகுதியில் இருந்து புகை வருவதை அருகில் வசித்து வருபவர் பார்த்து கூச்சலிட்டுள்ளனர்.

பின்னர் அருகில் சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அதிவேகமாக புகை வந்த நிலையில் மேற்கூரை பற்றி எரிந்தது. பின்னர் அவர்கள் தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நிலையில் தீயணைப்புத் துறையினர் வீட்டிற்குள் நுழைந்து தீயை அணைத்தனர். மேலும் வீட்டிலிருந்த 50,000 ரூபாய் மதிப்புள்ள வீட்டு  உபயோக பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. தொடர்ந்து தீ விபத்து குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.