வீடுகளை காலி செய்ய மறுத்து மறியல்...

உதகையில் வீடுகளை காலி செய்ய உத்தரவிட்ட நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீடுகளை காலி செய்ய மறுத்து மறியல்...

நீலகிரி | உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தல் முக்கோணம் அருகே உள்ள 26வது வார்டு பகுதியான கஸ்தூரிபாய் காலனியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் இப்பகுதியில் கால்நடைகள் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதால் நகராட்சி நிர்வாகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் காலம் காலமாக இப்பகுதியில் வசித்து வருபவர்களின் வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | ஏர் ஹார்ன் இருக்கா? அப்போ ஃபைன் கட்டுங்க.. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்...

இதனை அடுத்து இப்பகுதியில் வசித்து வருபவர்கள் தாங்கள் கூலி வேலை செய்து வருவதாகவும் தற்போது வீடுகளை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கு செல்வது என கூறி உதகை மத்திய பேருந்து நிலையம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பூத்துக் குலுங்கும் கார்ஸ் புதர் செடிகள்... புல்வெளி பகுதிகளுக்கு பாதிப்பு...