காட்டாற்றில் அடித்து வரப்பட்ட ‘உடும்பு’ மீட்பு...

குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட உடும்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினர் வனப் பகுதியில் விட்டனர்.

காட்டாற்றில் அடித்து வரப்பட்ட ‘உடும்பு’ மீட்பு...

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் இன்று 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் திடீரென்று தற்போது காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவி நீருடன் உடும்பு ஒன்று வந்து விழுந்தது. உடும்பு பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் ஊர்ந்து வந்ததை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்ததும் வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் உடும்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் வைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

மேலும் படிக்க | ‘சூசைட் பாயிண்ட்’ வரை செல்ல அனுமதிக்க கோரிக்கை...