எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் உற்சாக பொங்கல் கொண்டாட்டம்...

எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் உற்சாக பொங்கல் கொண்டாட்டம்...

சென்னை | உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின் திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருவிழாவாகும். பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வீரத்தை பறை சாற்றும் இந்த விழாவை தமிழர்கள் தொன்று தொட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் சார்பில் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழர்களுக்கே உரிய பட்டு, கைத்தறி ஆடைகளை உடுத்தி உற்சாகமாக, வண்ணமயமாக காட்சி அளித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தாரை தப்பட்டை, நாதஸ்வரம், பறை இசை, வில்லுப்பாட்டு, கரகாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், கோலாட்டம், சிலம்பம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட வீர விளையாட்டுகளோடு மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து உற்சாக நடமாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சமத்துவப்புரம் கொண்டாடிய சமத்துவ பொங்கல் திருவிழா...