பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கிய உப்பு உற்பத்தி...

பல மாதங்களுக்குப் பிறகு மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி துவங்கியது.

பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கிய உப்பு உற்பத்தி...

விழுப்புரம் | மரக்காணம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைந்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படும் இடமாகவும் மரக்காணம் விளங்குகிறது.

மேலும் படிக்க | ஏர் ஹார்ன் இருக்கா? அப்போ ஃபைன் கட்டுங்க.. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்...

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்த வடகிழக்கு பருவ மழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி முற்றிலுமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், இந்த தொழிலை மட்டுமே நம்பி இருந்த சுமார் 250 குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.

மேலும் படிக்க | மேய்ந்து கொண்டிருந்த 400 வாத்துகள் உயிரிழப்பு...

மேலும் வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்வதற்கான பணி தொடங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை ...