செல்ல பிராணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்...

மீஞ்சூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

செல்ல பிராணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்...

திருவள்ளூர் | மீஞ்சூரில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையினர் மூலமாக வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகம் நடைபெற்றது. இதன் மூலம் நமது வீட்டில் வளர்க்கப்படும்  நாய் மற்றும் பூனை ஆகிய விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் படிக்க | 15000ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை.... மீட்பு பணிகள் தீவிரம்!!!

மேலும் செல்ல பிராணிகளால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இங்குதான் விலங்குகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து குறிப்பாக நாய்கள் நம்மை கடித்தால் அதன் மூலம் நமக்கு நோய்கள் பரவாமல் இருக்க இந்த வகை தடுப்பூசிகள் உதவுகின்றன.

இதன் மூலம் நாய்களிலிருந்து நமக்கு ஏற்படும் நோய்கள் முற்றிலுமாக தடுக்கப்படுகிறதாக இந்த முகாமில் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை திறந்து வைத்த அமைச்சர்...