அரசு தலைமை மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்...

கடலூரில் மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அரசு அலுவலகங்கள், அரசு தலைமை மருத்துவமனையில் மழைநீர் தேங்கியுள்ளது.

அரசு தலைமை மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்...

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

மேலும் படிக்க | வெள்ளத்திற்கு மத்தியில் அலட்சியமாக தரைபாலம் கடக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள்...

கடலூர் மாநகராட்சி அலுவலகம், சுற்றுலா மாளிகை, இ.பி. ஆஃபிஸ், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அரசு தலைமை மருத்துவமனையில் தேங்கிய மழை நீரால் நோயாளிகள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | நெய்தல் ஆற்றில் சிறுபாலம் உடையும் அளவு கரைபுரண்டோடிய வெள்ளம்...