பழனியில் கந்தசஷ்டி கவசம் பாடிய இசைக்கல்லூரி மாணவர்கள்...

மார்கழி மாதத்தை முன்னிட்டு பழனி மலை முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாதம் 108 என்ற பெயரில் கந்தசஷ்டி கவசம் பக்தி இன்னிசை நடைபெற்றது.

பழனியில் கந்தசஷ்டி கவசம் பாடிய இசைக்கல்லூரி மாணவர்கள்...

திண்டுக்கல் | பழனி முருகன் கோவிலில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நாதம்108 என்ற பக்தி இன்னிசை நடைபெற்றது. மார்கழி மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர்.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு இசைக்கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று இந்த சஷ்டி கவசத்தை பாடினர்.

மார்கழி மாதம் முழுவதும் உள்ள பிராதன கோவில்களில் தொடர்ந்து பக்தி இன்னிசை பாடி வருவதாகவும், சென்னை வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று பழனிமுருகன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பாடலை பாடினர்.

மேலும் படிக்க | 65 கிடா வெட்டி 10,000 ஆண்கள் கலந்து கொண்ட அசைவ திருவிழா...

நாதம 108 என்றபெயரில் நடைபெற்ற பக்தி இன்னிசை நிகழ்வில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் சௌமியா, பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன்,  ஒருங்கிணைப்பாளர் சுதாராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கந்தசஷ்டி கவசத்தை இசலக்குழுவினர் மனமுருக பாட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்து தாங்களும் இணைந்து பாடி முருகனை வழிபட்டனர்.

மார்கழி மாதத்தை முன்னிட்டு பழனி மலை முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாதம் 108 என்ற பெயரில் கந்தசஷ்டி கவசம் பக்தி இன்னிசை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு இசைக்கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கந்தசஷ்டி கவசத்தை பாடினர்.

மேலும் படிக்க | நெல் காத்த நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்...