தொடர்ந்து 5 மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவர்கள்...!

தொடர்ந்து 5 மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவர்கள்...!

தேனி மாவட்டத்தில் தீபம் தற்காப்பு கலை அறக்கட்டளை மற்றும் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கலைக்கழகம் இணைந்து பாவல வரிசையுடன் அடிமுறையும் சேர்த்து தொடர்ச்சியாக 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சோழா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான உலக சாதனை முயற்சியில் 173 மாணவர்கள் ஈடுபட்டனர்.

தேனி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரத்தில் நடைபெற்ற இந்த உலக சாதனை முயற்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மழையையும் பொருட்படுத்தாமல் தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

அதுமட்டுமல்லாமல், மற்றொரு சாதனையாக 8 வயது சிறுவன் ஹரிஷ் என்ற மாணவன் 50 நிமிடங்களில் சிலம்பம் சுற்றியவாறு ஆயிரம் தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்தார். உலக சாதனை முயற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் சோழா புத்தக நிறுவனர் முனைவர் நீலமேகம் விமலன், தீபம் அறக்கட்டளை மற்றும் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கலை கழக நிர்வாகிகள்  வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினர்.