குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்தி குத்து...

வேப்பனப்பள்ளி அருகே குடிபோதையில் தகராறு. கத்தியால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்தி குத்து...

கிருஷ்ணகிரி | வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜி கொத்தூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவர் நேற்று இரவு வேப்பனப்பள்ளியிலிருந்து கங்கோஜி கொத்துர் கிராமத்தை நோக்கி தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது எதிரே வந்த எட்டரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (டைய்லர்) மற்றும் சென்னையை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவின் நண்பர் தமிழ் என்ற இருவரும் சின்ன கொத்தூர் கிராமத்தின் அருகே இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்தபோது இரு சக்கர வாகனம் முருகேசன் மீது அதிவேகமாக ஓட்டிவந்து விபத்து ஏற்ப்படுத்தும் விதமாக வாகனத்தை ஓட்டிவந்ததாகவும்  குறித்து மூவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்ட தடை வேதனை அளிக்கிறது - முன்னாள் அமைச்சர் விஜயபஸ்கர்

இதனால் அப்பகுதியில் மூன்று பேருக்கும் கைகளைப்பு ஏற்பட்ட நிலையில் அப்போது தமிழ் என்பவர் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசன் என்பவர் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் முருகேசனுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு நிலையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் முருகேசனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து முருகேசன் போலீசாருக்கு  புகார் அளித்ததை எடுத்து வேப்பனப்பள்ளி போலீசார் எட்டரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த   கோவிந்தராஜனை கைது செய்து  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.  

மேலும் இந்த  சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சென்னையை சேர்ந்த தமிழ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவரின் கழுத்தை கத்தியால் அறுத்த சம்பவம் வேப்பனப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | அண்ணாமலை குறித்து அவதூறு வீடியோ பரப்பிய நபர்...! கைது செய்த போலீசார்..!