ஆசிரியர் பாலியல் தொல்லை - சிபிசிஐடி விசாரணை - ஆர்ப்பாட்டம்

மாணவர் விடுதியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆசிரியரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஆசிரியர் பாலியல் தொல்லை - சிபிசிஐடி விசாரணை - ஆர்ப்பாட்டம்

பாலியல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி க்கு ஒப்படைத்து விசாரணை நடத்த வேண்டும் என நாம் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

மேலும் படிக்க | ஆதிதிராவிடர் பகுதியில் ரேசன் கடை - சமையல் செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

மயிலாடுதுறையில் தனியார் பள்ளி மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு நடைபெற்ற பாலியல் வன்முறை காரணமாக கடந்த மாதம் 18ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஆசிரியர் சீனிவாசன் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு
நாம் மக்கள் இயக்கம் தலைவர் சங்கமித்ரன் தலைமையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியரின் ஓரின பாலியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், மாணவர் விடுதி உரிமையாளர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும், ஆசிரியர் சீனிவாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், பள்ளியின் பாலியல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி க்கு ஒப்படைத்து விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.