வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு...

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு நடைபெற்றது.

வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு...

திருவள்ளூர் | மீஞ்சூர் அடுத்த கேசவபுரத்தில் ஸ்ரீ சக்தி வாராஹி அம்பாள் பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசிமாத தேய்பிறை பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தேய்பிறை பஞ்சமியில் வாராஹி அம்பாளை வழிபட்டால் பூர்வஜென்ம கர்மா விலகும், திருமண தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை தழைத்தோங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல ஐஸ்வரியங்கள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

விழாவின் முதல் நிகழ்வாக கோவில் பூசாரி தாட்சாயினி சரவணன் தலைமையில் கோவில் வளாகத்தில் நவதானியங்களை கொண்டு சிறப்பு யாகம் வார்க்கப்பட்டு பூர்ணாஹதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க | மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு...

ஏராளமான பெண்கள் அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி பல்வேறு வேண்டுதலுக்காக பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து வாராஹி அம்பாளுக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவின் சிறப்பம்சமாக வாராஹி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வாராஹி அம்மனை வழிபட்டு சென்றனர். 

மேலும் படிக்க | புதன் ஸ்தலத்தில் தேர் திருவிழா... வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்...