தென்காசியில் மும்முரமாக தொடங்கிய பிசான நெல் சாகுபடி...

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதால் ஆங்காங்கே நீர்த்தேக்கம் அடைந்துள்ளது. குளங்களில் நீர் நிரம்பி வருவதால் பிசான நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தென்காசியில் மும்முரமாக தொடங்கிய பிசான நெல் சாகுபடி...

தமிழகத்தில் விவசாயத் தொழிலையே பிரதானமாகக் கொண்ட மாவட்டங்களில் தென்காசியும் ஒன்று.

தென்காசி : கார் நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு அறுவடை முடிந்துள்ள நிலையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள குண்டாறு, கடனாநதி, இராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் கோவில் அணை ஆகிய 5 அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க | அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்கூரையில் வழிந்தோடும் மழைநீர்...

இதே போன்று சிற்றாறு, குண்டாறு, அனுமன் நதி ஆகிய ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் குளங்களிலும் நீர் நிரம்பி வருகிறது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டை, வடகரை, அச்சன்புதூர், கடையநல்லூர், சிவகிரி, சுரண்டை, ஆலங்குளம், கடையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  விவசாயிகள் பிசான நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றனர்.

மேலும் படிக்க | ஒரு மாதமாக நீரில் மூழ்கிய வாழை மரங்கள்...

விவசாயிகள் விளை நிலங்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு ஒரு சில பகுதிகளில் நடவு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் கட்டமாக விளை நிலங்களில் உரம் போடும் பணியும், இதனைத் தொடர்ந்து நெற்பயிர் நடவு பணிகளும் நடைபெற்று வருகிறது.

நெற்பயிர் சாகுடி தீவிரமாக நடந்து வரும் நிலையில் நெற்பயிருக்கு முக்கியமாக தேவைப்படும் யூரியா உரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகமும், வேளான்மைத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க | வெள்ளத்தில் மூழ்கும் சிதம்பரம்... வாய்க்கால் கரைகளை உயர்த்த கோரிக்கை...