தமிழ் பாரம்பரியத்தை பின்பற்றிய விழா... குவியும் பாராட்டுகள்!!

தமிழ் பாரம்பரியத்தை பின்பற்றிய விழா... குவியும் பாராட்டுகள்!!

திருச்செந்தூர் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சியில் தமிழில் மந்திரங்கள் சொல்லி யாகம் நடத்தி சடங்கு நடைபெற்றது.  இது தற்போது பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுவருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு கிராமத்தில் ரவிசங்கர்- அனிதா  தம்பதியினரின்  மகளான கனிமொழி என்பவரின் பூப்புனித நீராட்டு விழா இன்று நடைபெற்றது.  இதில் சடங்கு நிகழ்ச்சிகள்  அனைத்தும் தமிழ் காலாச்சாரம் முறையிலேயே நடைபெற்றது.  

ஓதுவார்கள் மூலம் நடைபெற்ற  யாகவேள்வியின் போதும் தமிழில் மந்திரங்கள் சொல்லி தமிழ்க்கடவுள்கள்,  மூதாதையர்களின் பெயர்களை சொல்லியும்  ஆசிர்வாதம் வேண்டியும் சம்பிரதாய  பூஜைகள் நடைபெற்றது. தமிழ்  மொழி மீதுள்ள பற்றின்  காரணமாக சமஸ்கிருத மொழிக்கு மாற்றக தமிழில் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது பொதுமக்களிடையே பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.  அதனைத்தொடர்ந்து விழாவிற்கு  வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் அந்த குடும்பத்தினரையே வாழ்த்திச்சென்றனர்.

இதையும் படிக்க:  ஒரு சிறப்பு அரசாணை பிறப்பிக்க வேண்டும்... திருமாளவன் கோரிக்கை!!