போலீஸ்காரர்கள் என் புள்ளைய அடித்தே கொன்னுட்டாங்க கதறும் தாய்

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு - காவலர்கள் தடியால் அடித்து கொலை செய்து விட்டதாக சிறுவனின் தாய் குற்றச்சாட்டு

போலீஸ்காரர்கள் என் புள்ளைய அடித்தே கொன்னுட்டாங்க கதறும் தாய்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி இவருக்கு திருமணமாகி நிர்மலா என்கிற மனைவியும் 3-மகன்களும், 3-மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான கோகுல்ஸ்ரீ (17). என்பவர் கடந்த மாதம் தாம்பரம் ரயில்வே குடியிருப்பில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக ரயில்வே போலீசார் அவரை கைது செய்து கடந்த 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கோகுல் ஸ்ரீக்கு 17-வயதே ஆனதால் அவரை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் படிக்க | குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
      
     இதனை அடுத்து கோகுல் ஸ்ரீ கடந்த 29ஆம் தேதி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தாம்பரம் ரயில்வே போலீசாரால் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி திடீரென கோகுல் ஸ்ரீ உடல் நல குறைவால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோகுல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 இந்நிலையில் கோகுலின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தாய் நிர்மலா குற்றச்சாட்டு முன்வைத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் 29ஆம் தேதி தனது மகனை தாம்பரம் இரயில்வே போலீசார் அழைத்துச் சென்று சிறையில் விட்ட போது நலமுடன் தான் இருந்தார் எனவும், உள்ளே சென்றபோது அங்கிருந்த காவலர் ஒருவர் கோகுலை கடுமையாக மிரட்டியதாகவும், தனது மகனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள காவலர்கள் அடித்து கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் கோகுலின் உடலில் பலத்த காயங்கள் உள்ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் படிக்க | போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி...! மாணவர்கள் பங்கேற்பு

 முன்னதாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கோகுல் ஸ்ரீயின் உடலை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா பார்வையிட்டார். தொடர்ந்து வீடியோ பதிவு செய்த நிலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.