வாரச்சந்தை இடம் மாற்றுவதில் திமுக - பாஜக இடையில் கடும் வாக்குவாதம்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய நடைப்பெற்ற கருத்துகேற்பு கூட்டத்தில் பா.ஜா.க திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்

வாரச்சந்தை  இடம் மாற்றுவதில் திமுக - பாஜக இடையில் கடும் வாக்குவாதம்

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் உள்ள வாரச்சந்தையை பேருந்து நிலையமாகவும் பேருந்து நிலையத்தை வார்த்தையாகவும்  மாற்ற நகராட்சி கூட்டத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை அப்போதைய சில வார்டு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அறிவிப்பால் வாரச்சந்தைக்கு இட நெருக்கடி ஏற்படும் எனவே இந்த அறிவிப்பை  திரும்ப பெற வேண்டும் என காரமடை பகுதி விவசாயிகள் மற்றும் வாரச்சந்தையில் கடைவைத்திருப்போர் என திரண்டு நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க | முதலமைச்சர் கலந்துகொண்ட விழாவில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்திய சம்பவம் - பொதுமக்கள் முகம் சுழிப்பு

இருப்பினும் அந்த அறிவிப்பு திரும்பபெறாமல் இருந்த நிலையில் இன்று காரமடையில் வாரச்சந்தை மை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கருத்துகேற்பு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காரமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் , அரசியல் கட்சியினர்மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் என 1000பேர் கலந்து கொண்டனர்

 இந்த  கருத்துகேற்பு கூட்டத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ் முன்னிலையில் நடைப்பெற்று கொண்டிருந்த போது ஒருவர் பின் ஒருவராக தங்களது கருத்துக்களை பேசி வந்தனர்.அப்போது பா.ஜ.க முன்னாள் கவுன்சிலர் ஒருவர் வாரச்சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய போது திமுகவை சேர்ந்த சிலர்  பா.ஜ.க நிர்வாகிகள் பேச கூடாது என கூறினார்

இதனை கண்ட பா.ஜ.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்பினரும் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டு வாக்குவாதமாக மாறியது

அரசியல் கட்சியினர் பேச கூடாது என்றால் அனைத்து அரசியல்வாதிகளும் வெளியேற சொல்லி பா.ஜ.கவினர் கூட்டத்தில் கோஷங்களை எழுப்பிய நிலையில் அதற்கு திமுகவினர் பதில் கோஷம் எழுப்பியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் படிக்க |கோயிலுக்குள் நுழைவதில் சாதிய பாகுபாடு - சமாதான பேச்சுவார்த்தை - பட்டியலின மக்கள் மகிழ்ச்சி

 இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அமரவைத்தனர்
--