திருச்சி ஒரு மிகப்பெரிய மையமாக மாறும்  -கே.என்.நேரு

திருச்சி ஒரு மிகப்பெரிய மையமாக மாறும்  -கே.என்.நேரு

வருங்காலத்தில் திருச்சி ஒரு மிகப்பெரிய மையமாக மாறும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார் 


திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில் "20 மாத காலம் அரசு சார்பில் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்க கண்காட்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. திருச்சிக்கு 'டைடல் பார்க்' திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். மாநகராட்சிக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை உடனடியாக அதற்கு கொடுக்க உள்ளோம். டைடில் பார்க்க போன்ற எண்ணற்ற திட்டங்கள் வர உள்ளாதால் திருவெறும்பூர் முதல் அசூர் வரை அரை அடி நிலம் கூட வாங்க முடியாத அளவிற்கு அந்த பகுதி வளர்ச்சி அடைய உள்ளது" என தெரிவித்தித்துள்ளார். மேலும் அரிஸ்டோ மேம்பாலம் விரைவில் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.திருச்சி ‘தலைவலி’க்கு தீர்வு: 3 மாதத்தில் ரெடியாகும் அரிஸ்டோ மேம்பாலம்!


மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அரிஸ்டோ மேம்பாலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டு கடந்த ஆண்டு  மீண்டும் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.