பாலத்தின் ஓரத்தில் சிக்கிய சீனி ஏற்றி வந்த லாரி...

தினசரி சந்தைக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் திடீரென லாரி பழுதாகி பாலத்தின் ஓரத்தில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாலத்தின் ஓரத்தில் சிக்கிய சீனி ஏற்றி வந்த லாரி...

தூத்துக்குடி | கோவில்பட்டியில் நகராட்சி தினசரி சந்தையில் கடை நடத்தி வரும் கண்ணன் என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கரூரில் இருந்து லாரியில் 10 டன் சீனி லோடு வந்துள்ளது.

இந்த லாரி நகராட்சி தினசரி சந்தை - ராமசாமி திரையரங்கு சாலை இடையே இருக்கும் பாலத்தின் வழியாக சீனி மூட்டைகளை இறங்க சென்ற போது திடீரென நிலைகுலைந்த லாரி பாலத்தின் ஓரத்தில் நின்றபடி உள்ளது.

லாரியின் டயர்கள் பாலத்தின் ஓராத்தின் விளம்பில் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரியில் இருந்த மூட்டைகள் அனைத்து அகற்றப்பட்டு, லாரியை லவகமான முறையில் மீட்டனர்.

இருந்த போதிலும் பாலத்தின் ஓரப்பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

மேலும் படிக்க | வர்ற போற நெடுஞ்சாலைக்காக இப்போ இருக்கற சாலையை ஏன் எடுக்குறீங்க?