வானமாமலை பெருமாள் கோவில் பங்குனி தங்கத்தேர் திருவிழா...!

வானமாமலை பெருமாள் கோவில் பங்குனி தங்கத்தேர் திருவிழா...!

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் பங்குனி தங்கத்தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பழமையான வானமாமலை பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி   வெகுவிமரிசையாக  நடைபெற்று வருகிறது.  இதனை தொடர்ந்து  வானமாமலை பெருமாள் கோவிலில் திருவரமங்கை தாயாருக்கு  தினமும் சிறப்பு எண்ணெய் காப்பு திருமஞ்சனம்  சங்காபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தியும்,  தீர்த்த விநியோகம் மற்றும் அலங்கார பூஜைகளும் நடத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து  தினமும் காலை மற்றும் மாலை வேளையில்  பெருமாள் திருவரமங்கை தாயாருடன் வாகனங்களில் எழுந்தருளினார்.  1,2, 3 நாள் திருவிழாவில் பல்லக்கில் கருடன் வருவது,  4ம் திருவிழா நாளில் ஆள் ஏறும் பல்லக்கிலும் அனுமன் எழுந்தருளுவது, மற்றும்  சிம்மம் வாகனங்களிலும்  வீதி உலா வருவதும், 5ம் திருநாளில் கருட வாகன புறப்பாடும், 6ம் நாளில் யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளிய வீதி உலாவும் போன்ற நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

7ம் திருநாளில் பெருமாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.  8ம் நாள் குதிரை வாகனத்திலும் 9ம் திருவிழாவில் சந்திரபிரபை வாகன புறப்பாடும் வழக்கமாக நடைபெறும்.  இந்நிலையில் தினமும் பெருமாளுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும் தேங்காய் பழம் படைத்தும் வழிபட்டு வந்தனர்.

10ம் நாள் திருவிழாவான இன்று காலை  தங்க தேரோட்ட விழா தொடங்கியது.  நாங்குநேரி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமி பிற்பகல் 11. 30 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.  இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து  பெருமாளை தரிசித்தனர்.

இதையும் படிக்க:  திருநெல்வேலி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்...காரணம் இதோ!