பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உப்பு பாத்திகள்...

வேதாரண்யத்தில் பருவம் தவறி பெய்த மழையால் சேதமடைந்த உப்பு பாத்திகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உப்பு பாத்திகள்...

நாகை | வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி ஆண்டுதோறும் நடைபெறும்.

கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை நிறைவுற்றவுடன் வெயில் அடிக்க தொடங்கியதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வந்தது.

மேலும் படிக்க | 83 வேட்பு மனுக்கள்...6 பேர் வாபஸ்...இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்த நிலையில் கடந்த வாரம் பருவம் தவறி பெய்த கனமழையால் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி பாத்திகள் கடுமையாக சேதம் அடைந்தது. மழையால் சேதம் அடைந்த  உப்பு பாத்திகளை மீண்டும் இரண்டாவது முறையாக சரி செய்யும் பணியில் உப்பளத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பருவம் தவறி பெய்த மழையால் உப்பு பாத்திகள் சேதம் அடைந்ததால் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒரு வாரகாலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | மருத்துவராக பணிபுரிந்த போதே அரசியலுக்கு வந்தேன்...தமிழிசை பெருமிதம்!