பயன்படுத்த முடியாத நிலையில் வாக்கி டாக்கி... மீனவர்கள் புகார்...

நடுக்கடலில் படகு பழுதடைவது, எரிபொருள் பற்றாக்குறை, உடல்நலக்குறைவு போன்ற அவசர தேவைகளுக்குக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பயன்படுத்த முடியாத நிலையில் வாக்கி டாக்கி... மீனவர்கள் புகார்...

திருவள்ளூர் | பழவேற்காடு சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் சுமார் 30000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். பழவேற்காடு ஏரியில் ஒரு தரப்பினரும், கடலில் ஒரு தரப்பினரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

கடலில் சென்று மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் கரையில் இருப்பவர்களையும், மீன்வளத்துறையினரையும் தொடர்பு கொள்ள வசதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...

பழவேற்காட்டிலும் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் சுமார் 1000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பழவேற்காட்டில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் அருகே சிக்னல் டவர் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையும் இயங்கி வருகிறது. கடந்த 6மாதங்களாக பழவேற்காடு மீனவர்கள் வாக்கி டாக்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

பழவேற்காடு மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை 80 ல் முறையாக சிக்னல் கிடைப்பதில்லை எனவும் இதனால் கடலில் தொழில் மீன்பிடிக்க செல்லும் போது படகுகள் பழுதடைந்தாலோ, டீசல் தீர்த்துவிட்டாலோ, யாரேனும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டாலோ அவசர தேவைகளுக்கு சக மீனவர்களை உதவிக்கு அழைக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | நள்ளிரவில் கொட்டி தீர்த்த கன மழை..! வாக்கி டாக்கியுடன் களமிறங்கிய மேயர் ப்ரியா..!

சிக்னல் சரிவர இயங்காததால் வாக்கி டாக்கியில் உள்ள ஜிபிஎஸ் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், அதிகளவு மீன்கள் இருப்பிடம் குறித்து சக மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாத நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் கடலில் ஏற்படும் சூறைக்காற்று குறித்த எச்சரிக்கையை கரையில் உள்ளவர்கள் கடலில் இருப்பவர்களுக்கு தெரிவிக்க முடியாத நிலை இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 6 மாதங்களாக பய்னபடுத்த முடியாத நிலையில் இருப்பதை மீனவர்கள் சுட்டிக்காட்டியும் அதனை சரி செய்ய மீன்வளத்துறை அதிகாரிகள் முன்வராமல் அலட்சியமாக செயல்படுவதாகவும், மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மீனவர்கள் கடலுக்கு சென்று பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய வசதியாக வாக்கி டாக்கி சிக்னலை சரிசெய்து மீண்டும் பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்க | இனி வாக்கி டாக்கியில் தான் அனைத்து தொடர்புகளும்...