மேலும் ஒரு புதிய மதுபான கடை... எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா...

புதுச்சேரியில் குடியிருப்பு பகுதியில் புதிய மதுபானக்கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கலால் துறை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு புதிய மதுபான கடை... எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா...

புதுச்சேரி கிழக்குக்கடற்கரைச்சாலை அருகே சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் மக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் புதிய மதுபானக்கடை திறக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து பலகட்டப் போராட்டஙகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலால்துறை ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகையிட திரண்டனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | நிம்மதியா மொட்டை கூட அடிக்க முடியலை- மொட்டையடிக்க அதிக கட்டணம் கேட்டதால் பக்தர்கள் தர்ணா...

இந்த போராட்டம் காரணமாக கலால் துறை அருகில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு செல்லக்கூடியவர் சிரமம் அடைந்தார்கள். மேலும் தட்டாஞசாவடி தொழிற்பேட்டைக்கு செல்லமுடியாமல் போக்குவரத்து தடைபட்டது.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவிகள்...