கிணற்றில் தவறி விழுந்த மான் பத்திரமாக மீட்பு...

கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்த மான் பத்திரமாக மீட்பு...

தேனி | கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி தொட்டி பாலம் அருகே உள்ள தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கூடலூர் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் தொட்டி பாலம் அருகே எல்ஐசி சுருளி வேல் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மான் ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததாக கம்பம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | கிணற்றில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு...

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மானை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பத்திரமாக மீட்டனர்.

மீட்டப்பட்ட மானை கம்பம் மேற்கு வனச்சரக ரேஞ்சர் அன்பிடம் ஒப்படைத்தனர். மேலும்  மீட்கப்பட்ட மான் சுமார் ஒரு வயதான கடமான் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட மானை  வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர் வனத்துறையினர்.

மேலும் படிக்க | 228 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவன்...