மாலை முரசு செய்தி எதிரொலி...கமுதி அருகே மேம்பாலம் அமைக்கத் திட்டம்!

கமுதி அருகே செய்யாமங்கலம் கிராமத்திற்கு முன்பாக அமைந்துள்ள தரைப்பாலம்  மேல் மூழ்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது.

மாலை முரசு செய்தி எதிரொலி...கமுதி அருகே மேம்பாலம் அமைக்கத் திட்டம்!

வைகை அணையில் இருந்து  7 ஆயிரம் கனஅடி வீதம் பார்திபனூருக்கு  தண்ணீர் வந்தடைந்தது.

வைகையில் நீர் வரத்து அதிகம்

பார்த்திபனூரிலிருந்து 4500 கன அடி தண்ணீர் ராமநாதபுரம் பெரியகண்மாய் மற்றும் கமுதியில் உள்ள பரளையாறு, குண்டாற்றுக்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் செல்கின்றது. இந்த நிலையில் கமுதி அருகே செய்யாமங்கலம் கிராமத்திற்கு முன்பாக அமைந்துள்ள தரைப்பாலம்  மேல் மூழ்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது.

கிராமத்திலேயே முடங்கும் சூழல்

இதனால் செய்யாமங்கலம் , தாதனேந்தல், பிரண்டைகுளம்,  புதுப்பட்டி, முனியனேந்தல்  உள்ளிட்ட ஐந்து கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்தில்  வெள்ளநீர் பெருக்கெடுத்து  செல்வதால் அன்றாட வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் 5 கிராமத்திலுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகி வந்தது.

மாலை முரசில் செய்தி வெளியீடு

இதனையடுத்து தரைப்பாலத்தில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் பொதுமக்கள் மற்றும்  பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பாலத்தை கடந்து சென்றனர்.

இதுகுறித்து மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சி வாயிலாக செய்தி வெளியிடப்பட்டதின் எதிரொலியாக,  ஐந்து கிராம மக்களின் வசதிக்காக மேம்பாலங்கள் கட்ட அதிகாரிகள் வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளனர். தனால் கிராம மக்கள் மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சி  மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்..