கரைப்பாலத்தை மூழ்கடித்து ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர்...

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

கரைப்பாலத்தை மூழ்கடித்து ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர்...

மதுரை : வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது எடுத்து தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதி, மூல வைகை, கிளை நதி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் வைகை அணையில் நீர்மட்டம் 70.1 அடியை எட்டியது.

இதன் காரணமாக நேற்று இரவு வைகை ஆற்றில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் வைகை ஆட்சி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிம்மக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்த படி வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது.

மேலும் படிக்க | வெள்ளத்தில் மூழ்கும் சிதம்பரம்... வாய்க்கால் கரைகளை உயர்த்த கோரிக்கை...

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றினுள் இறங்கவோ, குழிக்கவோ புகைப்படம் எடுக்கவோ இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லாததால் ஆற்றில் இறங்கி விளையாடும் பொதுமக்கள். மாநகராட்சி  சிறப்பான நீர் வடிகால் பணியால் இணைப்பு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

மேலும் படிக்க | 122 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் சின்னாபின்னமாகிய சீர்காழி...!