நகராட்சி தினக்கூலி ஊழியர்கள் போராட்டம்!

நகராட்சி தினக்கூலி ஊழியர்கள் போராட்டம்!

புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் பணி புரியும் தினக்கூலி ஊழியர்களை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தற்காலிக ஊழியர்கள்

உழவர்கரை நகராட்சியில் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர், இவர்களில் பலர் தினக் கூலி ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் தினக் கூலி  ஊழியர்களாக பணி புரிபவர்களை தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவை நகராட்சி நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. 

மேலும் படிக்க : மாவட்ட ஆட்சியரின் பெயரில் மோசடியில் ஈடுபட முயற்சி!

ஊழியர்கள் போராட்டம்

பிற அரசு ஊழியர்களுக்கு ஒய்வு பெறும் போது வழங்கும் பணிக்கொடைகளை ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியர்களுக்கும் அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியம் பெறும் முன்னாள் ஊழியர்கள் நகராட்சி வாயலில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர. அப்போது அவர்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.