உண்மையான சூப்பர் ஸ்டார், இந்த “ரஜினிகாந்த்” தான்... நீ வேற லெவெல் தலைவா...

16 வருடங்களாக குறையின்றி வாழ்ந்த ஒரு குடும்பத்திற்கு புதிதாக வீடு கிடைத்துள்ளது. அட்தனை பரிசாக அளித்த கடைக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உண்மையான சூப்பர் ஸ்டார், இந்த “ரஜினிகாந்த்” தான்... நீ வேற லெவெல் தலைவா...

நாகப்பட்டினம் | வெளிப்பாளையத்தை சேர்ந்த ரஜினிகாந்த் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் இறுதியில் கனமழை பெய்த இரவு நேரத்தில் நாகை புத்தூர் ஈசிஆர் சாலை வழியாக சென்ற போது, பயன்பாடற்ற பேருந்து நிலையத்தில் பழைய கிழிந்த சாக்குகளை போர்வையாக கட்டி ஒரு ஓரத்தில் ஒருவர் நிற்பதை பார்த்துள்ளார். அருகில் சென்று விசாரித்தபோது அந்த நபர் பேச மறுத்ததோடு அச்சத்தில் அவரது உடல் நடுங்கியுள்ளது.

பேருந்து நிலையத்தில் உட்புறத்தில் இரண்டு பெண்கள் மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி சுருண்டு கிடந்தனர். சூழ்நிலையை புரிந்து கொண்ட காய்கறி கடைக்காரர், மறுநாள் பகல் நேரத்தில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சென்று அச்சத்தில் உறைந்திருந்த மனிதனிடம் மெதுவாக பேசி அவரது அச்சத்தை போக்கி நம்பிக்கை ஊட்டி விவரம் கேட்டுள்ளார்.

மேலும் படிக்க | தாயின் அறிவுரையால் சரணடைந்த சகோதரர்கள் - கோவை சம்பவத்தில் நெகிழ்ச்சி!

அச்சம் நீங்கிய நபர் சிறிது சிறிதாக பேச துவங்கினார். தனது பெயர் வெங்கடேசன் வயது 49 என்பதும் தந்தை பெயர் தியாகராஜன் தாயார் சித்ரா என்றும் தெரிவித்துள்ளார். தியாகராஜன் நகராட்சியில் வரி வசூலிப்போராக பணியாற்றி ஓய்வு பெற்று கடந்த 1988 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். சந்திரா அங்கன்வாடி ஊழியர் ஆக பணியாற்றியுள்ளார்.

தியாகராஜனுக்கு நான்கு மகன்கள் இரண்டு மகள்கள் தியாகராஜன் இறந்த சில ஆண்டுகளில் வருவாய் துறையில் பணியாற்றிய வெங்கடேசனின் மூத்த சகோதரரும் சாலை விபத்தில் பலியானார். ஏதோ காரணத்தினால் வெங்கடேசன் குடும்பத்தில் அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டனர். சொந்த வீட்டை விட்டு வெளியேறிய குடும்பத்தினர் 16 ஆண்டுகளாக வானத்தைக் கூறையாக்கி நிலா வெளிச்சத்தை விளக்காக்கி வாழ்ந்து வந்தனர்.

மேலும் படிக்க | சுகாதாரத்துறை வரவேற்புடன் பெங்களூரு வந்தடைந்த சூப்பர் ஸ்டார்...

மழைக்காலங்களில் சாலையோர பேருந்து நிலையத்தில் தஞ்சம் புகுந்த குடும்பத்தினர் குறித்து தெரிந்தவர்கள் அளித்த உதவியால், சில நேரங்களில் பசியை போக்கி உள்ளனர். உணவு கிடைக்காமல் பசியால் குடும்பத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இறந்து போக வெங்கடேசனும் அவரது சகோதரிகள் வசந்தி 45 ஜெயந்தி ராணி 40 ஆகியோர் மட்டுமே மனநலத்துடன் உடல் நலமும் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதி நாட்களை எதிர்பார்த்து இருப்பது தெரியவந்தது.

மேலும் படிக்க | பெண்ணின் அருள்வாக்கு நிஜமானது! கோவில் கற்சிலைகள் மீட்பு...

இந்த தகவலை ரஜினிகாந்த் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கவனத்திற்கு கொண்டு சென்றார். உடனடியாக மருத்துவ குழுவினருடன் சமூக நலத்துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மூலம் நாகூர் சம்பா தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க பரிந்துரைத்தார்.

இத்திட்டத்தில் வீடு ஒதுக்கீட்டிற்கு பயனாளிகள் பங்களிப்பாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பதால் பணத்தை மாவட்ட ஆட்சியர் தனது சொந்த விருப்ப நிதியில் வழங்குவதாக தெரிவித்ததை எடுத்து வெங்கடேசனுக்கு உடனடியாக வீடு வழங்கப்பட்டது

மேலும் படிக்க | சுக பிரசவத்தில் 4.2 கிலோ எடையுள்ள குழந்தை.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி...

இதனை அடுத்து பழைய பேருந்து நிலையத்தில் இருந்த குடும்பத்தினரை அடுக்குமாடி குடியிருப்பு இடம்பெயர செய்து   குடும்பத்திற்கு தேவையான கட்டில், மின்விசிறி சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் உணவுப் பொருட்கள், புத்தாடைகள், என அனைத்தையும் தன் சொந்த பணத்தில் வெங்கடேசன், குடும்பத்திற்கு வாங்கி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி மனநல பாதிப்பிலிருந்து வெங்கடேசன் குடும்பத்தினர் மீண்டு வர மருத்துவ குழுவினர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

மனிதநேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மனிதநேயத்தின் மூலமே இறைவனை காண முடியும் என உணர்த்திய காய்கறி கடைக்காரருக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்துல எதுவுமே இல்ல...